கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசின் பரிசுத்தொகை அறிவிப்பு
தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்ற நிலையில் அவருக்கு அதிமுக, திமுக, ஆகிய கட்சிகள் ஏற்கனவே ரொக்கப்பரிசு தொகை அளித்துள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கோமதி மாரிமுத்துவுக்கு 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்வுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மேலும் கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகிய இருவரும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்பதையும் முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்