கோமளவல்லி எனும் பெயர் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது: ராதாரவி

கோமளவல்லி எனும் பெயர் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது: ராதாரவி


ஜெயலலிதாவுக்கு கோமளவல்லி என்ற பெயர் உள்ளது முக்கால்வாசி பேர்களுக்கு தெரியாது என்று கேள்வி ஒன்றுக்கு நடிகர் ராதாரவி பதிலளித்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் ராதாரவி கூறியதாவது: கோமளவல்லி எனும் பெயர் ஜெயலலிதாவைக் குறிக்கிறது என்கிறார்கள். எனக்கே இப்போதுதான் தெரியும். இந்தப் பெயரை வைத்ததில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா, ஜேஜே, ஜெயம், ஜெயலட்சுமி என்று வைத்திருந்தால், அது ஜெயலலிதாவைக் குறிக்கிறது என்று சொல்லலாம். இந்தப் பெயர் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது.

இதே விஷயங்களுடன், இதே கோமளவல்லி என்ற பெயருடன் இப்படி இலவசப் பொருட்களை எரிப்பது போல், 2016ல் படமெடுக்க தைரியம் இருக்கிறதா என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஏன்? 2016ல் எடுத்தால் என்ன?

ஜெயலலிதா இல்லாததால், இவர்களுக்கு குளிர்விட்டுப் போச்சு என்று அமைச்சர்கள் சொல்லுகிறார்கள். உண்மையில், ஜெயலலிதா இல்லாதது, அமைச்சர்களுக்குத்தான் குளிர்விட்டுப் போய்விட்டது. அப்படிக் குளிர்விட்டுப் போனதால்தான் ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசுகிறார்கள். மைக்கெடுத்துப் பாடுகிறார்கள். அதுவும் எம்ஜிஆர் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். அதனால்தான் சொல்லுகிறேன், அமைச்சர்களுக்கு ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டுப் போய்விட்டது.

இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.

Leave a Reply