கோமாளி’ டிரைலர் சர்ச்சை: ரஜினி ரசிகர்களுக்கு ஐசரி கணேஷ் விளக்கம்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் குறித்த ஒரு சர்ச்சை காட்சி இருப்பதை ரஜினி ரசிகர்கள் கண்டித்து வரும் நிலையில் இதுகுறித்து ஏற்கனவே இயக்குனர் பிரதீப் விளக்கமளித்துவிட்ட நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் இதுகுறித்து கூறியதாவது:
ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று விரும்புவதால் தான் அந்த காட்சிக்கு ஒப்புதல் தந்தேன் என்று ‘கோமாளி’ பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ” ஒரு தீவிர ரசிகனாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியே அந்த காட்சியை வைத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே கோமாளி படத்தின் முன்னோட்டக் காட்சி ரஜினியின் அரசியல் அறிவிப்பை கேலி செய்வதாக கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், தற்போது “கோமாளி ” படக்குழுவை கண்டிக்கும் விதமாக “நாளைய தமிழகம் ரஜினி ” என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.