கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: முதல்வர் அறிவிப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், நேற்று பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, ‘எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, ஆடம்பர விழா அல்ல என்றும், மக்களுக்கு பயனளிக்கும் விழா என்றும் கூறினார்.
மேலும் சென்னை அருகே உலகத்தரத்தில் புதிய பன்னாட்டு விமான நிலையம், பள்ளிக்கரணையில் புறநகர் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், கிராமப்புற வீடுகள் மற்றும் நிலங்களில் காய்கறி உற்பத்தியை ஊக்கப்படுத்த, முதலமைச்சரின் கிராமப்புற வீட்டுக்காய்கறி உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 344 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் தனது அறிவிப்பில் முதல்வர் குறிப்பிட்டார்.
எம்ஜிஆர், கோயம்பேடு, அதிமுக, பழனிச்சாமி