கோயம்பேடு பேருந்து நிலைய பெயர் திடீர் மாற்றம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் இன்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற சமீபத்தில் தமிழக அரசு முடிவு செய்த நிலையில் இன்று முதல் அந்த பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றப்பட்டுள்ளது. எனவே இனி பேருந்துகளின் பெயர்ப்பலகையிலும் இதே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்
மேலும் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைக்கும்படி கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது