கோயில்களில் ரதி – மன்மதன்!

கோயில்களில் ரதி – மன்மதன்!

radhiதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்கு கோயில் உள்ளது.

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

சேலம் மாவட்டம் ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன் ஈசனைப் பூஜித்ததால் இறைவன் அருள்மிகு
காம நாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

குமார சம்பவம் அதாவது முருகனின் திருஅவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின் மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட தர்மபுரியாகும்.

மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர் மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகாள நாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான்.

Leave a Reply