கோயில் கோபுரத்தை விட உயரமாக வீடு கட்டலாமா?

கோயில் கோபுரத்தை விட உயரமாக வீடு கட்டலாமா?

3கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோயிலின் ராஜகோபுரத்தை அந்தப் பகுதியிலேயே மிக உயரமாக அமைத்து அதன் உச்சியில் எளிதில் எலக்ட்ரான்களை கடத்தும் தன்மையுடைய தாமிரம் முதலான உலோகங்களைக் கொண்டு கூர்மையான முனையை உடைய கலசங்களை அமைத்தார்கள். அதற்குக் காரணம், இடி மின்னல் முதலான இயற்கை இடர்பாடுகளை அவை தமக்குள் வாங்கிக்கொண்டு நம்மைக் காக்கும் என்பதால்தான்.

தற்காலத்தில் இடிதாங்கி, மின்னல் கடத்தி போன்ற சாதனங்களைக் கண்டுபிடித்த பிறகு கோபுரத்தை விட உயரமாக வீடு கட்டி உச்சியில் இந்த சாதனங்களைப் பொருத்திக்கொண்டால் என்ன என்ற எண்ணம் நமக்கு உதிக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். நேரமின்மை, தீட்டு முதலான காரணங்களால் ஆலயத்திற்குச் செல்ல இயலாதவர்கள் கூட தங்கள் வீட்டு மாடியில் இருந்தே கோபுர தரிசனம் செய்வர்.

அதனை மறைக்கும் விதமாக உயரமான கட்டிடத்தைக் கட்டுவது தவறு. அடுத்தவர்களின் பக்திக்கு இடைஞ்சல் செய்வது போல் ஆகிவிடும். மேலும் இறைவன் உறையும் ஆலயத்தின் கோபுரத்தை விட என் வீடு உயரமானது என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டாவது தவறல்லவா? அதனால் உயரமான கட்டிடம் கட்ட நினைப்போர் ஆலயம் அமைந்திருக்கும் பகுதியைத் தவிர்த்து வேறு பகுதியில் கட்டுவதே நல்லது.

Leave a Reply