கோல்ட்மேன் சாக்ஸ் மியூச்சுவல் பண்ட் அனுமதி ரத்து
கோல்ட்மேன் சாக்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்திருப்பதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்திருக்கிறது.
இதனால் கோல்ட்மேன் சாக்ஸ் மியூச்சுவல் பண்ட், கோல்ட்மேன் சாக்ஸ் ட்ரஸ்டி கம்பெனி, மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் அசெட் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் தொடர்பான எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது என ‘செபி’ தெரிவித்திருக் கிறது.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறு வனத்தை ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் வாங்கியது. அனைத்து பண்ட்களும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து `செபி’ இந்த நடவடிக்கையை எடுத்தது.
2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோல்ட்மேன் சாக்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை ரூ.243 கோடிக்கு ரிலையன்ஸ் வாங்கியது. அப்போது 12 பண்ட்கள் இருந்தன. அவை ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட்க்கு மாற்றப்பட்டன.