அதிரடி அறிவிப்பு
கோவா செல்லும் பயணிகள் முன்கூட்டியே அனுமதி பெற்று வர வேண்டிய சூழ்நிலையில் இனிமேல் முன்கூட்டியே பயண அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுவதாகவும் கோவா அரசு தெரிவித்துள்ளது
இருப்பினும் கோவாவிற்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு நெகட்டிவ் என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது
ஒருவேளை கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றால் 2000 ரூபாய் கட்டணத்தில் கோவாவிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்கள் கோவாவிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கோவாவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது