கோவில் வாசலில் பச்சிளங்குழந்தை: கொடூர தாய் யார்?

கோவில் வாசலில் பச்சிளங்குழந்தை: கொடூர தாய் யார்?

விழுப்புரம் மாவட்டம் வி.பிரம்மதேசம் என்ற பகுதியில் பிறந்து ஒருசில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று, கோயில் வாசலில் வீசப்பட்டு இருந்த சம்பவம் அப்பகுதியினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வி.பிரம்மதேசம் அம்மன் கோயில் பகுதியில் துணிப்பை ஒன்றில் சுற்றிய நிலையில் ஒரு பச்சிளங்குழந்தை அழுது கொண்டிருந்ததை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு, பெரியதச்சூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அந்த பெண் குழந்தை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது குழந்தை நலமாக இருப்பதாக தெரிகிறது. பிறந்து ஒருசில மணி நேரத்தில் கோவில் அருகே வீசிச்சென்ற கொடூர தாய் யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது

Leave a Reply