கோவை அரசு மருத்துவமனையில் பிரேமலாதவுக்கு அனுமதி மறுப்பு: போலிசாரிடம் வாக்குவாதம் செய்த தேமுதிக தொண்டர்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடி வரும் நிலையில் தமிழக அரசும், சமூக அமைப்புகளும் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தேமுதிக இன்று தமிழகம் முழுவதும் டெங்குக்கு எதிராக களப்பணி செய்து வருகின்றது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு செய்த விஜயகாந்த், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் உடல்நலம் விசாரித்தார்.
இதேபோல் விஜய்காந்த் மனைவியும் தேமுதிக பிரமுகருமான பிரேமலதா இன்று கோவை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறி உடல்நலம் விசாரிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தேமுதிக நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.