கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு பரோல் கிடைக்குமா?
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு அளித்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஏப்ரல் 29ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு பரோல் கிடைக்குமா? என்பது ஏப்ரல் 29ஆம் தேதி தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது