கோவை சிறுமி கொலை: உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
கோவையை சேர்ந்த 6 வயது சிறுமி மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் சிறுமியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி உடலை குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை வாங்கமட்டோம் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமியை நேற்று மர்ம நபர் ஒருவர் கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்து அந்த சிறுமியின் உடலை ஒரு டீசர்ட்டில் சுருட்டி முட்டுச்சந்தில் வீசியெறிந்துள்ளான். இந்த கொலைகாரனை பிடிக்க போலீசார் வலைவீசி தீவிர முயற்சியில் உள்ளனர்