கோவை சிறுமி பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்
கோவை துடியலூரில் சமீபத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது.
இந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வந்த கயவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் போலீசார் சந்தோஷ்குமார் என்பவனை கைது செய்தனர். சிறுமியை கொலை செய்ததாக இவன் ஒப்புக்கொண்டுள்ளான்.
இந்த நிலையில் கோவை துடியலூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆறுதல் கூறியுள்ளார்.