சசிகலாவை சந்தித்த 9 பேர்? மீதி 8 பேர் எங்கே?

சசிகலாவை சந்தித்த 9 பேர்? மீதி 8 பேர் எங்கே?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்களில் செந்தில்பாலாஜி சமீபத்தில் திமுகவில் இணைந்துவிட்டார். இந்த நிலையில் சற்றுமுன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமு, உமாமகேஸ்வரி, பார்த்திபன் உள்ளிட்ட 9 பேர் சந்தித்துள்ளனர்.

18 தகுதி நீக்க எம்.எல்.ஏக்களில் செந்தில் பாலாஜி தவிர இன்று 17 பேர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் 9 பேர் மட்டுமே சந்தித்துள்ளதால் மீதி 8 பேர் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த 8 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களும் அதிமுக அல்லது வேறு கட்சியில் இணைய போகிறார்களா? என்ற வதந்தி பரவி வருவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply