சசிகலா செய்த மிகப்பெரிய தவறு: மு.க.ஸ்டாலின்
சசிகலா செய்த தவறுகளில் மிகப்பெரியது, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வரான நிலையில் திடீரென அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்திய சசிகலா, தானே முதல்வராக முயற்சித்தார். ஆனால் அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் சிறை சென்ற சசிகலா, சிறைக்கு செல்லுமுன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார்.
இதுகுறித்து இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சசிகலா செய்த தவறுகளில் மிகப்பெரிய தவறு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆடு வளர்த்தேன், மாடு வளர்த்தேன் என்று கூறுவதாகவும், அவர் மக்களை வளர்த்தாரா? என்றும் கேள்வி எழுப்பினார்