சசிகுமார் உறவினர் தற்கொலைக்கு காரணம் யார்? திடுக்கிடும் தகவல்
நடிகர், இயக்குனர் சசிகுமாரின் உறவினரும் சசிகுமாரின் கம்பெனி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான அஷோக் குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். மதுரையை சேர்ந்த பைனான்சியர் ஒருவரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக, காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பைனான்சியர் அன்புச் செழியன் மூலம் கந்துவட்டி கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சசிகுமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.