சட்டத்திற்கு மேல் யாரும் பெரிதில்லை: ஐபிஎஸ் அதிகாரி ரூபா
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இந்த கைது குறித்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு மேல் யாரும் பெரிதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. என்னுடைய கருத்துக்கு வேறு அர்த்தங்களை சேர்க்க நினைக்கின்றனர். அப்புறம் என்ன?.. அவர்களை பற்றி கூறுங்கள் என பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்கள். ஒரு காவல்துறை அதிகாரியாகவும், குடிமகளாகவும் அனைத்து குற்றவாளிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. இதுவும் ஒரு முன்மாதிரி நிகழ்வு என்றாலும் கூட, குற்றவியல் சட்ட அமைப்பு எல்லோருக்கும் சமமானதாக இருக்கு போது, நான் இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
A few replying to my tweet are indulging in whataboutery. What about then, what about them etc. As a cop n a citizen, my stand is all culprits have to be brought to book. Whenever this criminal justice system becomes a leveller, I become more hopeful. Even if it's one instance.
— D Roopa IPS (@D_Roopa_IPS) August 21, 2019