சட்டபூர்வமாகிறதா கருக்கலைப்பு? நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில், பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றம். 40 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருக்கும் இந்த சட்டத்தை நீக்கக் கோரி, பல வருடங்களாக சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் நிறைவேறும் பட்சத்தில், பெண்கள் கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள், மருத்துவரின் உதவியோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். எந்தவிதமான சட்ட விதிமுறைகளையும் அவர்கள பின்பற்ற வேண்டியதில்லை.