சத்தான சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோசை
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
கோதுமை மாவு – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து வெந்ததும் தோலை நீக்கி விட்டு துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெடி.