சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில், சத்துணவுத் திட்டத்தில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8-ஆம் தேதி வரை அவகாசம் ஏற்கெனவே வழங்கப்பட்டது. இந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்க வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட சத்துணவு மையங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள திருத்த காலிப்பணியிடங்கள் அடிப்படையில் வருகிற 20-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்றார்.

Leave a Reply