சத்து நிறைந்த முருங்கைப்பூ தொக்கு செய்வது எப்படி?

சத்து நிறைந்த முருங்கைப்பூ தொக்கு செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

தோலுரித்த சின்ன வெங்காயம் – 1 கப்

பூண்டு – 10 பல்

முருங்கைப்பூ – 1 கப்

பச்சைமிளகாய் – 2

காய்ந்த மிளகாய் – 2

புளி – எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த பெருங்காயம் – அரை டீஸ்பூன்

தக்காளி – 2

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, மிளகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். பிறகு உரித்த முழு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்குங்கள். அதனுடன் முருங்கைப்பூவையும் புளிக்கரைசலையும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடுங்கள். இறக்குவதற்கு முன் வெந்தய-பெருங்காயப் பொடி சேர்த்துக் கொஞ்சம் நல்லெண்ணெய் விடுங்கள். லேசாகக் கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் கமகம முருங்கைப்பூ தொக்கு தயார். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் உகந்தது.

Leave a Reply