சந்திர பகவானுக்கு உகந்த சில முக்கியமான தகவல்கள்

சந்திர பகவானுக்கு உகந்த சில முக்கியமான தகவல்கள்

மனோகாரகனாக சந்திரனே உடலுக்கும் காரணமானவன். ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும். ஜென்ம லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. உலக வாழ்வுக்கு சரீர பலம் முக்கியம், சரீர பலத்திற்கு மனவளம் அடிப்படை சந்திரன் பலம் பெற்றிருந்தால் மேற்சொன்ன இரண்டையுமே அடைய முடியும். சந்திரனுக்கு உகந்தவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

காரகம் – மாதா

தேவதை – பார்வதி

தானியம் – பச்சரிசி, நெல்

உலோகம் – ஈயம்

நிறம் – வெண்மை

குணம் – சாத்வீகம் (தெய்வீக குணம்)

சுபாவம் – சவுமியா

சுவை – இனிப்பு

திக்கு – தென்கிழக்கு

உடல் அங்கம் – தோல்

தாது – ரத்தம்

நோய் – சிலேத்துவம் (குளிர்ச்சியான உடல்)

பஞ்சபூதம் – நீர்

பார்வை நிலை – தான் நின்ற ராசியில் இருந்து முழுமையாக 7-ம் பார்வையும், 3, 10 ஆகிய இடம் கால்பங்கு, 5,9 ஆகிய இடங்கள் அரைபங்கு, 4,8 இடங்கள் முக்கால் பங்கு

பாலினம் – பெண்

உபகிரகம் – பரிவேடன்

ஆட்சி ராசி – கடகம்

உச்ச ராசி – ரிஷபம்

மூலத்திரிகோண ராசி – ரிஷபம்

நட்பு ராசி – மிதுனம், சிம்மம், கன்னி

சமமான ராசி – மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

பகைராசி – இல்லை (ஏனெனில் சந்திரன் பூமியை மட்டுமே சுற்றி வருவதால்)

நீசராசி – விருச்சிகம்

திசை ஆண்டுகள் – 10 ஆண்டுகள்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – இரண்டே கால் நாட்கள்

நட்பு கிரகங்கள் – சூரியன், புதன்

சமமான கிரகங்கள் – செவ்வாய், குரு, சுக்ரன், சனி

பகை கிரகங்கள் – ராகு, கேது

அதிக பகையான கிரகம் – எதுவும் இல்லை

இதர பெயர்கள் – இந்து, மதி, திங்கள், சோமன், உருபதி, சசி, சகி

நட்சத்திரங்கள் – ரோகிணி, அஸ்தம், திருவோணம்

Leave a Reply