சபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்? தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்? தேவசம் போர்டு விளக்கம்

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

இந்த நிலையில் சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்களான ஆந்திர மாநில தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பாத்திமா ஆகிய இரு பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் விளக்கம் அளித்ததாவது: கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை அனுமதிப்பதல்ல. அந்த இரு பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொருவர் செய்தியாளர்; இது லட்சக்கனகான பக்தர்களின் உணர்வை பாதிக்கும் என்பதால் இருவரையும் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply