சபரிமலையில் உயிரிழப்புக்கு வாய்ப்பு: நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த சிறப்பு காவல் ஆணையர்
ஐப்பசி மாதம் முதல் தேதி சபரிமலையில் நடை திறக்கப்பட்டதும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் பெண்கள் தரிசனம் செய்ய காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஒருசில பெண்கள் அதிலும் வேறு மதத்தை சேர்ந்த பெண்கள் வீம்புக்காக சபரிமலைக்கு செல்ல முயன்றதால் பக்தர்கள் கொதித்தெழுந்தனர்.
இதனையடுத்து பெண்களால் ஐயப்பன் சன்னிதிக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் ஐயப்பன் சன்னிதி நேற்று நடை சாத்தப்பட்டது. இந்த மாதம் ஒரு பெண் கூட ஐயப்பன் சன்னிதானத்திற்குள் செல்ல முடியவில்லை
இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் சபரிமலை சிறப்பு காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், ‘அடுத்த மாதம் சபரிமலை நடை திறக்கப்படும்போது பக்தர்கள் கூட்டத்தில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.