சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியா? உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியா? உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு சீசனின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவதுண்டு

ஆனால் அதே நேரத்தில் இந்த கோவிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இதனை எதிர்த்து பல ஆண்டுகளாக பெண்கள் அமைப்பு போராடி வரும் நிலையில் சமீபத்தில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நாடே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்த நிலையில் சற்றுமுன்னர் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி இந்த வழக்கை ஐந்து பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாக அறிவித்தது. இந்த உத்தரவு தீர்ப்பை கேட்க வந்த பொதுமக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

Leave a Reply