சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து இன்று முழு அடைப்பு

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து இன்று முழு அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கேரள மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சபரிமலை கோயிலில் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து கேரளாவில் சபரிமலை கர்ம சமிதி உள்ளிட்ட அமைப்புகள் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் கேரளாவில் பேருந்துகள், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னதாக நேற்று ஐயப்பனை தரிசனம் செய்த இரண்டு பெண்களும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்கு வீட்டில் இருந்து சபரிமலையில் தரிசனம் செய்யும் வரை கேரள போலீஸ் பாதுகாப்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று 2 பெண்கள் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததால் அடைக்கப்பட்ட கோயில் நடை ஒரு மணிநேர பரிகார பூஜைக்கு பின்னர் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply