சபரிமலையை யுத்த களமாக மாற்றியுள்ளது கேரள அரசு: பொன்.ராதாகிருஷ்ணன்
சபரிமலை கோயிலை தடுப்புகள் அமைத்து யுத்த களமாக மாற்றியுள்ளது கேரள அரசு என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை கோவிலுக்கு சென்றபோது அங்கு காவல்துறை உயரதிகரி ஒருவர் மத்திய அமைச்சர் என்றும் பாராமல் கெடுபிடி காட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என்றும், விஷமிகள் வந்துவிடக்கூடாது என்று காரணம் கூறி, பக்தர்களிடம் காவல்துறை கெடுபிடி காட்டுகிறது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்,.