சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதியா? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பரபரப்பு

சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதியா? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பரபரப்பு
sabarimala_big
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை யாருக்கும் தடுக்கும் உரிமை கிடையாது என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருவதை எதிர்த்து பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரணை செய்தது. விசாரணையின்போது, பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.

“ஏன் ஒரு பெண் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லக் கூடாது? எந்த தர்க்கத்தின் அடிப்படையில் பெண்களை கோயிலுகுள் நுழையக் கூடாது என்று கூறுகிறீர்கள்? கோயிலுக்கு போகலாமா, வேண்டாமா? என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட தேர்வு. அரசியலமைப்புக்கு அதிகாரம் தராத வரையில் பெண்களை கோயிலுக்கு வரக்கூடாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.” என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 1500 ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லவில்லை என்பதற்காக ஆதாரத்தை தரும்படி சபரிமலை தேவஸ்தானத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இந்த விவகாரம் குறித்து ஒரு வார காலத்திற்குள் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply