சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது என்பதற்காக பக்திக்காக இல்லாமல் வீம்புக்காக சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐப்பசி 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டிருந்தாலும் சன்னிதானத்திற்குள் ஒரு பெண்கள் கூட நுழைய முடியவில்லை

இந்த நிலையில் சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. சுமார் 20 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக வரும் நவம்பர் .13ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றைய விசாரணையின்போது சபரிமலைக்குள் பெண்கள் நுழைவது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சபரிமலை, ஐயப்பன், சுப்ரீம் கோர்ட், சன்னிதானம்

Leave a Reply