சபரிமலை விவகாரம்: கேரள காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான கருத்தை கூறிய ராகுல்காந்தி
சபரிமலை விவகாரத்தை பக்தி மார்க்கமாக பார்க்காமல் அரசியலாக பார்க்கப்படுவதால் குழப்பம் அதிகரித்து கொண்டே வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா மாநில காங்கிரஸ் கட்சியினா் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளது குழப்பத்தின் உச்சகட்டமாக உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக கேரளா மாநில காங்கிரஸ், பா.ஜ.க., இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனா். குறிப்பாக கடந்த மாதம் கோவில் நடை திறந்தபோது கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரா்கள் தடுத்து நிறுத்தினா்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி சபரிமலை விவகாரம் குறித்து கருத்து கூறியபோது, இந்த விவகாரத்தில் எனது கருத்து கேரளா மாநில காங்கிரஸ் கட்சியினரின் கருத்தில் இருந்து முரணானதாக உள்ளது. ஆணும், பெண்ணும் சமம் என்ற நிலையில் எனது தனிப்பட்ட கருத்தின் படி கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், கேரளா மாநில மக்களின் உணா்வுகளின் அடிப்படையில் அங்குள்ள காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகள் அமைந்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.