சமந்தாவை கிண்டல் செய்த நாகார்ஜூனன்
சமந்தாவின் மாமனாரும் நடிகருமான நாகார்ஜூனா, சமந்தாவை கிண்டல் செய்துள்ளார். நேற்று சமந்தா நடித்த ‘சீமராஜா’ மற்றும் யூடர்ன் ஆகிய படங்களும், சமந்தாவின் கணவர் நாகசைதன்யா நடித்த சைலஜா அல்லுடு ரெட்டி’ என்ற படமும் ரிலீஸ் ஆகியது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடித்த மூன்று படங்கள் வெளியாவது இதுதான் முதல்முறை என்ற நிலையில் இதுகுறித்து நாகார்ஜூனா கூறுகையில், ‘“ஒரே குடும்பத்தினரின் மூன்று படங்கள் வெளியாகின்றன. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறார்” என கிண்டல் செய்துள்ளார்.
மேலும் ‘யூடர்ன்’ படம் குறித்து அவர் கூறியபோது “பவன் குமார் இயக்கத்தில் சுயாதீன படமாக உருவான ‘லூசியா’ கன்னடத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து மிகப்பெரும் வெற்றியாக ‘யு டர்ன்’ அமைந்தது. அதன் டிரெய்லர் பார்த்து வியந்தேன்.
இந்தப் படத்தின் கதையை சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. அந்தக் கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் திருப்புமுனையான காட்சிகள் என்னை வியக்கவைத்தன. திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகள் வெற்றியும் பெற வேண்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.