சமந்தா கூட இப்படி மிரட்டுவாரா? அதிர்ச்சியில் ரசிகர்

சமந்தா கூட இப்படி மிரட்டுவாரா? அதிர்ச்சியில் ரசிகர்

நடிகை சமந்தா என்றாலே ரசிகர்களுடன் மிகவும் அன்புடன் இருப்பவர் என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அன்புடன் பதிலளிப்பவர் என்றும் ரசிகர் எப்போது செல்பி எடுக்க அனுமதி கேட்டாலும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமந்தாவை கடுப்பாக்கிய ரசிகர் ஒருவரால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. சமந்தா சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார் அவர் படிகளில் ஏறி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு ரசிகர் தொடர்ச்சியாக அவரை பின்தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்

ஒரு கட்டத்தில் கடுப்பான சமந்தா இப்படி எவ்வளவு நேரம்தான் வீடியோ எடுப்ப, நடந்தா ஒழுங்கா நட, இந்த வீடியோ எடுக்குற வேலையெல்லாம் வச்சிக்கிடாதே’ என்று எச்சரித்ததால் அந்த ரசிகர் அதிர்ச்சி அடைந்தார் சமந்தாவின் இந்த திடீர் கோபம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

Leave a Reply