திஷா சாலியன் பெற்றோர்
இந்த சமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும் என்று மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அவரின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மும்பையின் 14 ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
திஷா சாலியன் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார் என்று இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் திஷா சாலியனின் தாயார் நாங்கள் எங்களுடைய ஒரே மகளை இழந்து தவிக்கிறோம். இப்போது இந்த ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் தவறான செய்திகளை பரப்பி எங்களை கொல்ல பார்க்கிறார்கள். தயவு செய்து திஷா குறித்த பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.”