சமூக வலைதளங்களில் வதந்தியை தடுக்க மத்திய அரசு அதிரடி திட்டம்
சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது
அந்த வகையில், தற்போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவில் சில விதிகளை உள்ளடக்கி,சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
புதிய விதிகளை உள்ளடக்கிய இந்த சட்ட திருத்தம் வரும் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய, அந்தந்த நிறுவனங்களின் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..