சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல: சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி

சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல: சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. நேற்று ஐயப்பன் சன்னிதானத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. பெரும்பாலும் ஐயப்பனை தரிசிக்க பக்தியுடன் செல்லும் பெண்களை அனுமதிக்கலாம் என்றும் வீம்புக்கு செல்லும் பெண்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும். காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல. கோவிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது. மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பார்த்து செய்ய வேண்டும்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Leave a Reply