சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: முக ஸ்டாலின் காட்டம்
டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றும் இந்த சராசரி அறிவு கூட முதல்வர் பழனிசாமிக்கு இல்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முதல்வர் பழனிசாமி சமீபத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் எனவும் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியபோது, ‘டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவ்ப்பை வரவேற்கின்றோம். ஆனால், இதனை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்ற சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை. அதற்கே சிலர் பாராட்டி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு தான் நிதி வழங்குகிறது. அவர்கள் தான் அனுமதி கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஹைட்ரோ கார்பனுக்கு கிணறு தோண்டி குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதை மூடிய பிறகு தான் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறினார்/
வங்கிக்கடன்களை மத்திய அரசு தான் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிந்தும் அதனை திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது எந்த அறிவின் அடிப்படையில் என நெட்டிசன்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்,.