சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன் போராட்டம் நடத்தும் அதிமுகவினர்

சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன் போராட்டம் நடத்தும் அதிமுகவினர்

மதுரையில் உள்ள சினிப்பிரியா திரையரங்கில் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் கடந்த தீபாவளி தினாத்தில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த தியேட்டர் முன்பாக அதிமுகவினர் இன்று மதியம் முற்றுகையிட்டு தர்ணா நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்திருப்பதாகவும், வில்லி வரலட்சுமி கதாப்பாத்திரத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கவேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில், சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன்பாக, அதிமுகவினர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து ராஜன் செல்லப்பா கூறியபோது, ‘இதுபோன்ற போராட்டங்கள் சர்கார் ஓடும் பிற திரையரங்குகள் முன்பாகவும் நடத்தப்படும் என்றும், எங்கள் கோரிக்கை குறித்து ஆலோசிப்பதாக தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Leave a Reply