‘சர்கார்’ படத்தின் 2வது டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இளையதளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை அதிர வைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘சர்கார்’ படத்தின் அடுத்த டீசர் வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகத்தை போல தெலுங்கு மாநிலங்களிலும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் இந்த தெலுங்கு டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சர்கார் திரைப்படம் தமிழை போலவே தெலுங்கிலும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.