‘சர்கார்’ படத்திற்கு டிடிவி தினகரனும் எதிர்ப்பு

‘சர்கார்’ படத்திற்கு டிடிவி தினகரனும் எதிர்ப்பு

இளையதளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி இரண்டே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த இந்த படத்தில் இடம்பெற்ற ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக அமைச்சர்களை அடுத்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை சற்றுமுன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சர்கார் படத்தில் விலையில்லா திட்டங்களை விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், சர்கார், மக்களுக்கு கருத்து சொல்ல எடுக்கப்பட்ட படம் அல்ல என்றும், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட படம் என்றும் ஜெயலலிதா இருக்கும் போது அரசின் திட்டங்களை விமர்சிக்க இவர்களுக்கு தைரியம் இல்லை என்றும் தினகரன் கூறியுள்ளார்.

Leave a Reply