சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது குறித்த முக்கிய அறிவிப்பு

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது குறித்த முக்கிய அறிவிப்பு

சர்க்கரைக்கான ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசிக்கான ரேஷன் அட்டைகளாக மாற்றி கொள்ளலம் என சமீபத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இதன்படி சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து,https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான அவகாசம் நவம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply