சர்க்கரை நோயுள்ளவர்கள் பழங்கள் சாப்பிடலாமா?
உடற்பயிற்சிக்கும் நீண்ட ஆயுளுக்கும் உள்ள தொடர்பு?
ஒருவர் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே நீண்ட ஆயுள், மற்ற அனுகூலங்கள் சாத்தியம் என்கிறது யு.சி. இர்வின் ஆய்வறிக்கை. அதிகபட்சமாக 45 நிமிடங்கள் உடற்பயிற்சிசெய்தால் இன்னும் கூடுதல் பலன்களைப் பெறமுடியும்.
பாதாமைப் பற்றி நல்ல செய்தி சொல்லுங்கள்?
மிக அதிக சத்து கொண்ட அரிதான உணவுப் பொருட்களில் ஒன்று பாதாம். வைட்டமின் இ-யில் உள்ள ஆர்.டி.ஏ. (ரெகமண்டட் டயட்டரி அலவன்ஸ்)-ல் 75 சதவீதத்தை பாதாம் கொண்டுள்ளது. மற்ற விதை உணவுப் பொருட்களைவிட கால்சியம் சத்தையும் அதிகம் வைத்துள்ளது. புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி 17-ம் உள்ளது. மக்னீசியம், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்தது பாதாம்.
டைப்-2 நீரிழிவு நோயாளிகள் பழம் சாப்பிடலாமா?
ஓர் ஆய்வில், சர்க்கரை அளவு அதிகமுள்ள சாப்பாட்டுக்குப் பிறகு சிலருக்கு ஒரு துண்டு பழத்தைக் கொடுத்து பயோமெட் சென்ட்ரலில் ஆய்வு நடத்தியபோது, உணவுக்குப் பின்னான சர்க்கரை அளவு 15 முதல் 30 தவீதம் குறைவதைக் காணமுடிந்தது. தினசரி இரண்டு வேளைகள் கொஞ்சம் பழத்துண்டுகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்குப் பலனைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உறக்கத்துக்கு இடைஞ்சல் தரும் உணவுகள் என்னென்ன?
காபி, எனர்ஜி டிரிங்ஸை தவிர்க்க வேண்டும். நெஞ்செரிச்சல் தரும் கார உணவைச் சாப்பிட வேண்டாம். மதுவும், அதிக புரத உணவுகளும் கூடாது. தண்ணீரும் அதிகம் குடிக்கக் கூடாது. அடிக்கடி கழிவறைக்கு எழுந்து செல்ல வேண்டியிருக்கும்.