சர்ச்சைக்குரிய ஓவியங்கள்: மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி

சர்ச்சைக்குரிய ஓவியங்கள்: மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி

சென்னை லயோலா கல்லூரியில் பாரதமாதா குறித்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டதாக கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் புகார் மனு அளித்துள்ளன. இந்த புகார் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டடதற்கு லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டதாகவும், கண்காட்சியில் இருந்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் அகற்றப்ப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply