சவுதியில் பெண்களுக்கு முதல் முறையாக கார் ஓட்ட அனுமதி!

சவுதியில் பெண்களுக்கு முதல் முறையாக கார் ஓட்ட அனுமதி!

பெண்கள் வாகனம் ஓட்ட சவுதி அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. உலகம் முழுவதும் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் சூழலில், சவுதியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதையடுத்து பெண்களுக்கு அனைத்து வித உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சவுதி அரசர் சல்மான், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சவுதியில் இனி பெண்கள் வாகனம் ஓட்டத் தடையில்லை. அதற்காக பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட உள்ளது. இந்த நடைமுறை வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் வாகனம் ஓட்ட எந்த இடத்திலும் தடை விதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply