சவுதி அரேபியாவில் ஒரு ‘தனி ஒருத்தி’

சவுதி அரேபியாவில் ஒரு ‘தனி ஒருத்தி’

சவுதி அரேபியாவில் இன்னும் பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாட்டை உடைக்க தனி ஒருத்தியாக களமிறங்கியுள்ளார் மனால் அல் ஷரிஃப்.

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சவுதி அரேபியா திரும்பிய இவர், அமெரிக்காவில் உள்ள கார் ஓட்டும் சுதந்திரத்தை சவுதிஅரேபியாவிலும் பெற போராடி வருகிறார். இதற்காக இவர் சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டும் அசராமல் இந்த உரிமைக்காக போராடி வருகிறார்

மனால் அல் ஷரிஃப்பின் இந்த உறுதி பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஆதரவு குவிந்து வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு கார் ஓட்ட சுதந்திரம் அளிக்க பரிசீலிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு இறங்கி வந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply