சவுதி அரேபிய இளவரசிக்கு புதிய பதவி!
சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் சவுதி அரேபியாவின் இளவரசியாக இருக்கும் ரிமா பின்ட் பன்டர் என்பவர்
கடந்த சில வருடங்களாகவே சவுதி அரேபியாவில் கார் ஓட்டுவது உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளிநாட்டு தூதர் பதவியும் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி ரீமாவின் தந்தை சவுதி அரேபியா நாட்டு உளவுத்துறையின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் என்பதும் அமெரிக்காவுக்கான சவுதி தூதராக அவர் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அமெரிக்காவில் தங்கி படித்த இளவரசி ரீமா சவுதி அரேபியாவில் ஏற்கனவே ஒருசில சமூக சேவைகள் செய்து அமெரிக்க மக்களிடம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது