சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை
காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் இன்று ப.சிதம்பரத்துடன் ஆலோசனை செய்ததால் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உள்ளாட்சிதேர்தலில் காங்கிரஸ் தனித்துபோட்டியிட வேண்டும் என கருத்து கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்ததாகவும், இருவரும் இணைந்து விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது