சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் மேலாண்மை பொன்னுசாமி இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த அவர் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 66
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. ஐந்தாம் வகுப்புக்கு வரையே பள்ளிப்படிப்பு படித்தவர் என்றாலும் அவருக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உண்டு. புத்தகங்கள் படிப்பதை தனது உயிர் மூச்சாக கருதினார்.
இவரது எழுத்தில் இடதுசாரி கருத்துக்களின் தாக்கம் அதிகம் இருக்கும். 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் என மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 36 புத்தகங்களை எழுதியுள்ளார்.
மின்சாரப்பூ’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக கடந்த 2007ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ என்ற புத்தக தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருதும், வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் “மாட்சிமைப் பரிசு” என்ற கேடயமும்,
உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத டேட் வங்கியின் இலக்கிய விருதும் பெற்றவர்.
மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்