சாத்வி பிரக்யா சிங் பேச்சு மன்னிக்க முடியாத குற்றம்: பிரதமர் மோடி
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
காந்தியை அவமதிக்கும் சாத்வி பிரக்யா சிங் பேச்சு மன்னிக்க முடியாத குற்றம் என்றும், காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா சிங் கூறியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரக்யாசிங் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் இன்று பிரக்யாசிங் பேசியது மன்னிக்க முடியாத குற்றம் என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது