சானிட்டரி நாப்கினை சரியாக பயன்படுத்துவது எப்படி தெரியுமா?
சுகாதாரமான மாதவிடாய் நாள்களுக்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்கள், பெரும்பாலும் அதை அளவு பார்த்து வாங்க வேண்டும்.
சுகாதாரமான மாதவிடாய் நாள்களுக்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்கள், பெரும்பாலும் அதை அளவு பார்த்து வாங்குவதில்லை. ஆடை, உள்ளாடைகளைப் போல இதிலும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்
‘’பொருத்தமில்லாத அளவில் நாப்கினைப் பயன்படுத்துவதால், 80 சதவிகிதம் பெண்கள் கறைபடும் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். மாதவிடாய் நாள்களின் உதிரப்போக்குக்கு ஏற்பவும் ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்பவும் நாப்கின்கள் மீடியம், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப் பல அளவுகளிலும் பேக், ஃப்ரன்ட் கவரேஜ் எனப் பல வகைகளிலும் வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணும் இதில் தன் தேவை என்ன என்பதன் அடிப்படையில் நாப்கின் வாங்குவது நல்லது.
உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் முதல் மூன்று நாள்களுக்கு மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்த எக்ஸ்எல் சைஸ் நாப்கின்கள், உதிரப்போக்குக் குறையத் தொடங்கும் நான்கு, ஐந்தாவது நாள்களில் மீடியம்/லார்ஜ் சைஸ் நாப்கின்கள் எனப் பயன்படுத்தலாம். அதேபோல, மெனோபாஸை எதிர்கொள்ளும் பெண்களும் தேவையைப் பொறுத்து எக்ஸ்எல் நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.
பிரசவ நேரத்தில் அந்நாள்களின் அசௌகர்யங்களைக் கருத்தில்கொண்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும், நீளமும் அடர்த்தியும் அதிகம்கொண்ட ‘மெட்டர்னிட்டி பேடு’ பயன்படுத்தலாம். இதை மருத்துவமனையிலேயே வழங்குவார்கள்.